மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2021 11:34 PM IST (Updated: 10 Sept 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, கொள்ளிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி;
சீர்காழி, கொள்ளிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் சிலையை சேதப்படுத்தி அலுவலகத்தை சூறையாடியதை கண்டித்து சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் பிரபாகரன், நாகையா, கரிகாலன், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை சூறையாடி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி முன்னாள் முதல்- அமைச்சரின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். 
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் கேசவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜய், சண்முகம் விசாலாட்சி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், ஒன்றிய தலைவர் பாக்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். 

Next Story