மாவட்ட செய்திகள்

செண்டை மேள கலைஞர் மயங்கி விழுந்து சாவு + "||" + The drummer fainted and died

செண்டை மேள கலைஞர் மயங்கி விழுந்து சாவு

செண்டை மேள கலைஞர் மயங்கி விழுந்து சாவு
மன்னார்குடி அருகே திருமண நிகழ்ச்சியில் செண்டை மேள கலைஞர் மயங்கி விழுந்து இறந்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே திருமண நிகழ்ச்சியில் செண்டை மேள கலைஞர் மயங்கி விழுந்து இறந்தார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
செண்டை மேள கலைஞர்கள்
மன்னார்குடி அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு செண்டை மேள கலைஞர்கள் 11 பேர் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சியில் செண்டை மேளம் வாசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த குழுவில் பாலக்காடு சேட்டன்படி பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 24) என்ற கலைஞரும்  வாசித்து கொண்டிருந்தார். 
வாலிபர் மயங்கி விழுந்து சாவு
அப்போது அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே செண்டை மேள குழுவினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு விஷ்ணுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி் வருகிறார்கள்.