மாவட்ட செய்திகள்

வழக்கை வாபஸ் பெறக்கோரிகொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது + "||" + Youth arrested for making death threats

வழக்கை வாபஸ் பெறக்கோரிகொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

வழக்கை வாபஸ் பெறக்கோரிகொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சின்ன மூலைக்கரை சந்திகிணறு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவருடைய மனைவி பூவையார். சின்னமூலைக்கரை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கொம்பையா மகன் ஆறுமுகம் (20). மாரியப்பன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆறுமுகத்துடன் ஏற்பட்ட பிரச்சினையில், மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தன் மீது நிலுவையிலுள்ள வழக்கை வாபஸ் செய்ய வேண்டும் என மாரியப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கையில் வாள் வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மாரியப்பன் மனைவி பூவையாரையும் ஆறுமுகம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பன் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் விசாரணை நடத்தி ஆறுமுகத்தை கைது செய்தார்.