விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Sept 2021 1:50 AM IST (Updated: 11 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரியாபட்டி,
சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
திருச்சுழி 
சதுர்த்தியையொட்டி திருச்சுழி அருகே பரளச்சி வாகைக்குளம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகணபதி சிலை, ராகு-கேது, மூஞ்சூர் வாகனம் பலிபீடத்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலையில் விநாயகர் வழிபாடு மகா கணபதி நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. 
அதேபோல ஆலங்குளம், அப்பயநாயக்கர்பட்டி, வலையபட்டி, கண்மாய்பட்டி, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கரிசல்குளம், சங்கரமூர்த்திபட்டி, டி.என். சி. முக்கு ரோடு, பெரியார்நகர், சிமெண்டு ஆலை காலனி, கொங்கன்குளம், இருளப்ப நகர், அண்ணாநகர், கல்லமநாயக்கர் பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்பு பட்டி எதிர்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
தேவதானம் 
சேத்தூர் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி  108 சங்குகள் வைத்து யாகசாலை அமைத்து, ஹோம குண்டம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் இன்றி இந்த வழிபாடு  நடந்தது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பில் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் தாணிப்பாறை விளக்கின் அமைந்துள்ள ஆலமரத்து விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு  18 வகையான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூைஜ நடந்தது. 
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம், 15 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், பார்வை இழந்த 10 நபர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கினார். முன்னதாக ஆதி வழிவிடு விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள பெரிய விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கடை பஜார் செல்வ விநாயகர் கோவில், திருமுக்குளம் சர்வமங்கள வரசித்தி விநாயகர் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.  

Next Story