மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் காயங்களுடன் வாலிபர் பிணம் + "||" + The body of a youth in the Cauvery river

காவிரி ஆற்றில் காயங்களுடன் வாலிபர் பிணம்

காவிரி ஆற்றில் காயங்களுடன் வாலிபர் பிணம்
திருச்சி காவிரி ஆற்றில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
மலைக்கோட்டை
திருச்சி ஓயாமாரி சுடுகாடு எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் உடலில் ரத்தக் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று மதியம் முதல் காவிரி ஆற்றின் பாலத்தில் ஒரு கார் கேட்பாரின்றி நின்று கொண்டிருந்தது. ஆகவே, இறந்தவர் காரில் வந்தாரா? உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்பன போன்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.