விநாயகர் சிலைகள் பி.ஏ.பி.கால்வாயில் கரைப்பு


விநாயகர் சிலைகள் பி.ஏ.பி.கால்வாயில் கரைப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 10:15 PM GMT (Updated: 10 Sep 2021 10:15 PM GMT)

உடுமலை பகுதியில் இந்து முன்னணியினர் வைத்திருந்த விநாயகர் சிலைகள் பி.ஏ.பி.கால்வாயில் கரைக்கப்பட்டன.

உடுமலை
உடுமலை பகுதியில் இந்து முன்னணியினர் வைத்திருந்த விநாயகர் சிலைகள் பி.ஏ.பி.கால்வாயில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி உடுமலை வடக்கு நகர மற்றும் தெற்கு நகர இந்து முன்னணி சார்பில் உடுமலை நகராட்சி பகுதியில் நேற்று 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்து முன்னணி சார்பில் எஸ்.வி.புரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
உடுமலை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் மொத்தம் 19 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
சிலைகள் கரைப்பு
இதில் கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை நேற்று மாலை எஸ்.வி.புரத்தில் பி.ஏ.பி.உடுமலை கால்வாயில் கரைக்கப்பட்டது. இதேபோன்று 3 சிலைகள் அந்தந்த பகுதிக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
15 சிலைகள் உடுமலை-பழனி சாலையில் உள்ள வெஞ்சமடை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அவை ஊர்வலமாக கொண்டு வரப்படாமல் சிறிது நேர இடைவெளியில் அடுத்தடுத்து வெஞ்சமடை பகுதிக்கு வந்து சேர்ந்தன. பின்னர் பி.ஏ.பி.உடுமலை கால்வாயில் கரைக்கப்பட்டது.
போலீஸ் குவிப்பு
இதையொட்டி அந்த இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக தீயணைப்பு படையினரும் அங்கு பணியில் இருந்தனர்.

Next Story