மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 Sep 2021 12:07 AM GMT (Updated: 2021-09-11T05:37:22+05:30)

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

செங்கல்பட்டு்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமில் தங்கி கிரானைட் எந்திரம் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதியன்று அவர் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த மேல்மணம்பேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார்.

சாவு

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் குமார் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story