வெங்கல் அருகே லாரி மோதி விவசாயி பலி
வெங்கல் அருகே லாரி மோதியதில் விவசாயி பலியானார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள நாசரேத் கிராமத்தில் உள்ள உணவகம் அருகே விவசாயி கோபால் (வயது 55) நின்று கொண்டிருந்தார்.அப்போது திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கோபால் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கு காரணமான லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story