அச்சரப்பாக்கம் அருகே கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை


அச்சரப்பாக்கம் அருகே கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 10:34 AM GMT (Updated: 2021-09-11T16:04:22+05:30)

அச்சரப்பாக்கம் அருகே கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள சீதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லன். இவரது மகள் கோமதி (வயது 25) இவருக்கும் கூவத்தூரை சேர்ந்த ராஜி என்கிற ராஜசேகருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. கோமதி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர் கடந்த மாதம் ரத்தவாந்தி எடுத்ததாகவும் அதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சீத்தாபுரத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோமதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். கோமதியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக கோமதியின் தாய் மாயா என்கிற மாயாவதி அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story