திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.6 கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 546-க்கு தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.6 கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 546-க்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, கலசபாக்கம், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய 7 தாலுகா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதாடேனியல், நிரந்திர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதியுமான ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி, சிறப்பு சார்பு நீதிபதி (எம்.சி.ஓ.பி.) ஜகனாதன், கூடுதல் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, நீதித்துறை நடுவர்கள் கவியரசன், பாக்கியராஜ், அன்ஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.6 கோடியே 95 லட்சத்துக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் வந்து கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து வங்கி சார்ந்த வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என மொத்தம் 4,818 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு அதன் மூலம் ரூ.6 கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 546-க்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story