தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் அனுசரிப்பு


தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 3:54 PM GMT (Updated: 2021-09-11T21:24:26+05:30)

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் அனுசரிப்பு

தாராபுரம், செப்.12-
தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 64-வது குருபூஜை தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. விழாவிற்கு மாநில செயலாளர் டாக்டர் கணபதி தலைமை தாங்கினார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர்பேரவையினர் அஞ்சலி செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. காளிமுத்து தியாகி இமானுவேல் சேகரின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புச்சாமி, நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மணி, பேராசிரியர் சிவசாமி, ஆசிரியர் கலைசெல்வன், ஊரான், ராசு, ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story