ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மொபட் எரிப்பு


ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மொபட் எரிப்பு
x

திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மொபட் எரிக்கப்பட்டது.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர், அதேபகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஷாலினி. இவர், ஏ.வெள்ளோடு ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தியிருந்தார்.

 நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் ஷாலினியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், மொபட்டை தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

சிறிதுநேரத்தில் மொபட் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷாலினி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மொபட் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. 

இதுகுறித்து அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் ஷாலினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மொபட் எரிக்கப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story