தடையை மீறி விநாயகர் சிலை வைத்த 21 பேர் மீது வழக்கு


தடையை மீறி விநாயகர் சிலை வைத்த 21 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Sep 2021 4:18 PM GMT (Updated: 2021-09-11T21:48:51+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்த 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் மாலை தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர். இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் சுகுமார் உள்பட 6 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ததோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் கோட்ட தலைவர் சிவா உள்பட 15 பேர் மீதும் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story