ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி ஜெயங்கொண்டம் ஸ்டார் திருமண மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சி ரோடு, தெற்கு பள்ளி ஜூபிலி ரோடு, மேலக்குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி, பெரியார் மெட்ரிக் பள்ளி, செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சின்ன வளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரடிகுளம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி, மலங்கன்குடியிருப்பு அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெறுகிறது. இந்த அறிய வாய்ப்பை 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி குறிப்பிட்ட தேதியில் செலுத்திக் கொள்ளவும், இதுவரை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவது, வெளியில் செல்லும்போது முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மூன்றாம் அலையை எதிர்த்து போராட தயாராக வேண்டும் என நகராட்சி ஆணையர் சுபாஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story