மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து


மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 11 Sept 2021 9:52 PM IST (Updated: 11 Sept 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

கோத்தகிரி,

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் 7 சாலைகள் சந்திக்கும் பகுதி ஆகும். இங்கு பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்து இருக்கும். இந்த பகுதியில் நேற்று காலை கட்டுமான பொருட்களை ஏறி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் சரிந்து விழுந்தது. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சரிந்து கிடந்த மின்கம்பத்தை வெல்டிங் எந்திரத்தை பயன்படுத்தி வெட்டி அகற்றினர். பின்னர் புதிய மின்கம்பம் கொண்டு வரப்பட்டு மின்சார கம்பிகள் இணைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியின் காரணமாக சுமார் 2 மணி நேரம் கோத்தகிரி பகுதியில் மின் தடை ஏற்ப்பட்டது.

Next Story