ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 940 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 940 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 11 Sept 2021 9:52 PM IST (Updated: 11 Sept 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 940 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 2-வது அலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தொற்று அதிகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணமாகும். இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் முன்கள பணியாளர்களுக்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 

நோய்வாய்ப்பட்டவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நீலகிரியில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 940 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் 84 நாட்கள் பூர்த்தியானவர்கள் 2-வது டோஸ் செலுத்த தயாராகி வருகின்றனர்.

Next Story