சைக்கிள் பேரணியாக சிதம்பரம் வந்த விமானப்படை வீரர்களுக்கு வரவேற்பு


சைக்கிள் பேரணியாக சிதம்பரம் வந்த விமானப்படை வீரர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 11 Sept 2021 10:02 PM IST (Updated: 11 Sept 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

துணை போலீஸ் சூப்பிரண்டு நினைவு பரிசு வழங்கினார்

சிதம்பரம், 
தஞ்சாவூரில் உள்ள இந்திய விமானப்படையின் பொன்விழா ஆண்டை  முன்னிட்டு விமானப்படை வீரர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் சைக்கிள் பேரணியாக தஞ்சாவூரிலிருந்து மகாபலிபுரம் வரை செல்கின்றனர். செல்லும் வழியில் நேற்று காலை சிதம்பரம் கீழ வீதி வந்த விமானப்படை வீரர்களை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு வரவேற்று, நினைவு பரிசு வழங்கினார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குணபாலன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து விமானப்படை வீரர்கள் கூறுகையில், 
தஞ்சாவூரில் கடந்த 1971 ஆண்டு நடந்த போரில் விமானப்படை உதவியுடன்  இந்தியா வெற்றி அடைந்தது. அதனை கொண்டாடும் விதத்தில் பொன்விழா ஆண்டையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விமானப்படை கமாண்டர் அணித்தலைவர் நித்தின் உபாத்யா, அணியின் துணைத் தலைவர் சைலேந்திர சிங் ஆகியோர் தலைமையில் நாங்கள் தஞ்சாவூரில் இருந்து மகாபலிபுரம் வரை 700 கிலோ மீட்டர் சைக்கிளில் பேரணியாக செல்கிறோம். இன்று (அதாவது நேற்று) நாங்கள் சிதம்பரத்தில் தங்கி விட்டு, நாளை புதுச்சேரிக்கு புறப்படுகிறோம். இதையடுத்து அங்கிருந்து மகாபலிபுரம் சென்று விட்டு மீண்டும் மகாபலிபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வோம் என்றனர். 

Next Story