சோளிங்கர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது


சோளிங்கர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது
x
தினத்தந்தி 11 Sep 2021 4:54 PM GMT (Updated: 2021-09-11T22:24:06+05:30)

சோளிங்கர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது

சோளிங்கர்

ஆந்திர மாநிலத்தில் பெய்த கன‌மழை காரணமாக சித்தூர் கலவகுண்டா அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக  ஏரிகளாக நிரம்பி வருகின்றன. இதுகுறித்து சோளிங்கர்‌ பொதுபணித்துறை நீர்வள ஆதாரத்துறை பாசனப் பிரிவு உதவி பொறியாளர் சேரலாதன் கூறுகையில் சோளிங்கர் பொதுப்பணித்துறை நீர்வளஆதாரத்துறை பாசனப் பிரிவின் கீழ் 48 ஏரிகள் உள்ளது.

 தற்போது பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அனைக்கட்டு கிழக்கு பகுதி கால்வாய் பகுதியில் அமைந்துள்ள ரெண்டாடி, ஆவதம், கொடைக்கல், நந்தி மங்களம், போளிப்பாக்கம், கலாம்பாடி, தப்பூர், சோளிங்கர் உள்ளிட்ட 8 ஏரிகள் நிரம்பியுள்ளது. மேலும் சோளிங்கர்பாசன பிரிவின் கீழ் உள்ள மற்ற ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக தெறிவித்தார்.

Next Story