மாவட்ட செய்திகள்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. உதவி + "||" + Sivakumar MLA for those injured in the accident Help

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. உதவி

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. உதவி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிவக்குமார் எம்.எல்.ஏ. உதவி செய்தாா்.
செஞ்சி, 

திண்டிவனம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் குமரன்.  புதுவையை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் நாட்டார்மங்கலம் அருகே வந்தபோது மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் உடனடியாக காயமடைந்தவர்களை தனது காரில் ஏற்றி செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிவக்குமார் எம்.எல்.ஏ. அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நடந்தே சென்றார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.