கொரோனா தடுப்பூசி முகாம்
18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கீழக்கரை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமையில் வட்டார மருத்துவ ரசிக்தீன் துணை தாசில்தார் பழனிக்குமார் நகராட்சி தூய்மைபணி ஆய்வாளர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், கிராம அதிகாரி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மறவர் தெரு அரசுபள்ளி, தெற்குத் தெரு பள்ளிவாசல், சொக்கநாதர் கோவில் அங்கன்வாடி, முத்துசாமிபுரம் தொடக்கப்பள்ளி, சின்னக்கடை தெரு அங்கன்வாடி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி, போன்ற 18 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் பொது மக்களிடையே வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story