மாவட்ட செய்திகள்

666 வழக்குகளுக்கு தீர்வு + "||" + case

666 வழக்குகளுக்கு தீர்வு

666 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதி மன்றத்தில் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ாமநாதபுரம், 
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதி மன்றம் நிகழ்ச்சி அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கதிரவன் வர வேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் பேசியதாவது:- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினுரும் வெற்றி பெற்றதாக கருதப் படுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இந்த வருடத்தின் 3 வது தேசிய மக்கள் நீதிமன்றம். இந்த தேசிய மக்கள் நீதிமன்ற மானது பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய கோர்ட்டு வளா கத்தில் 7 அமர்வுகளில் நடைபெற்றது.  மொத்தம் ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதில் சமரசம் மூலம் 666 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் தீர்வுத் தொகையாக ரூ.2 கோடியே 38 லட்சத்து 95 ஆயிரத்து 336 அறிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி  சிட்டிபாபு, வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதிமன்றம் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு
குமாியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.