சங்கராபுரம் அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


சங்கராபுரம் அருகே  600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 5:24 PM GMT (Updated: 2021-09-11T22:54:07+05:30)

சங்கராபுரம் அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் வயல் பகுதியில் மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு சாராயம் காய்ச்சிகொண்டிருந்த மர்மநபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் அவர்கள் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அய்யனார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முருகன், அய்யனார் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களை தேடி வருகிறார்கள். 


Next Story