மூதாட்டியிடம் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மூதாட்டியிடம் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
தினத்தந்தி 11 Sept 2021 10:59 PM IST (Updated: 11 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் நகை திருட்டு

காரைக்குடி, 
காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 75). இவர் தேவகோட்டையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள சென்றார். விழா முடிந்து மீண்டும் அரியக்குடி திரும்ப, திண்டுக்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறி காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது கழுத்தில் அணிந்து இருந்த 3¾ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து லட்சுமி காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story