பிளஸ்-1 மாணவி பலாத்காரம்; தந்தை, காதலன் கைது
கடம்பூர் அருகே பிளஸ்-1 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் அவளது தந்தை மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய், தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். சிறுமியை அவருடைய தாயார் தன்னுடன் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சிறுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் கல்லூரி மாணவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே, சிறுமியின் தந்ைத கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, மகளை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் உண்டானது.
இதை அறிந்த தாயார் அங்கு வந்து மகளை தன்னுடன் அழைத்து சென்றார். ஆனாலும் தொடர்ந்து அவளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை ேகட்டதும் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை அவளது தந்தையும், காதலனும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தை மற்றும் காதலனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story