உளுந்தூர்பேட்டை அருகே ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

உளுந்தூர்பேட்டை அருகே  ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 11 Sept 2021 11:18 PM IST (Updated: 11 Sept 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் நேற்று ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செம்மனந்தல் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்
அப்போது புண்ணியமூர்த்தி(வயது 65) என்ற தொழிலாளி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அநை்த சக தொழிலாளிகள் அவரை சிகிச்சைக்காக திருநாவலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே புண்ணியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story