மாவட்ட செய்திகள்

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது + "||" + 3 arrested for rabbit hunting

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி குகநேசன் உத்தரவின் பேரில் வனச்சரகர் மாதேஸ்வரன், வனவர் பாண்டியன், வனக்காப்பாளர் அபிபிரியா மற்றும் வனத்துறையினர் வெண்பாவூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் வலையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது வெங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), முரளி (28), தொண்டமாந்துறையைச் சேர்ந்த வடிவேல் (32) ஆகியோர் முயல் வேட்டையாட முயற்சி செய்தது தெரியவந்தது. பின்னர் முயல் வேட்டையாட பயன்படுத்திய வலையுடன் 3 பேரையும் கைது செய்து வேப்பந்தட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.