ஓட்டல் உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாயும். கலெக்டர் தகவல்


ஓட்டல் உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாயும். கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2021 11:39 PM IST (Updated: 11 Sept 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாயும்

திருவண்ணாமலை

ஆரணி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் லோஷனி என்ற 10 வயது சிறுமி உயிழிந்தாள். 

இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் முருகேசிடம் கேட்டபோது, மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. உணவக உரிமையாளர் மற்றும் சமையலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

உணவு மாதிரிகளை கைபற்றி சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டு உள்ளது. முடிவுகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆரணி பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதிலும் குழுக்கள் அமைத்து உரிய கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதில் ஓட்டலில் தவறு நடைபெற்றது என்று நிருபிக்கப்பட்டால் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story