கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2021 11:46 PM IST (Updated: 11 Sept 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. வேலூர் தெற்கு தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். வடக்கு தாலுகா செயலாளர் நாகேந்திரன், காட்பாடி தாலுகா செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி, செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அங்குள்ள பத்திரிக்கை அலுவலகம் சூறையாடல் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்-அமைச்சர் தசரத்தேவ் சிலையை சேதப்படுத்திய பா.ஜனதாவினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரி நன்றி கூறினார்.

Next Story