எந்திரம் மூலம் நெல் பயிர் நடவு பணி தீவிரம்
சேத்தூர் பகுதியில் எந்திரம் மூலம் நெல் பயிர் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே தேவதானம் கிராமத்தில் எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு தற்போது அம்மன் ரக நெல்லை எந்திரம் மூலம் பாத்திகட்டி சாகுபடி செய்துள்ளோம். அடுத்த மாதம் இதனை நடவு செய்ய உள்ளோம். இதனை எந்திரம் மூலம் நடவு செய்வதால் நெல்கொள்முதல் அதிகமாக கிடைக்கும் என்றும், இதற்கான செலவு குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டதால் இந்த தடவை எந்திரம் மூலம் நெல்பயிர் நடவு பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story