மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு ஆரோக்கிய ஓட்டம் + "||" + Health flow

விழிப்புணர்வு ஆரோக்கிய ஓட்டம்

விழிப்புணர்வு ஆரோக்கிய ஓட்டம்
விருதுநகரில் விழிப்புணர்வு ஆரோக்கிய ஓட்டம் நடைபெற்றது.
விருதுநகர், 
இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆரோக்கிய இந்தியா என்ற தலைப்பில் தொடர் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கவும், மக்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம் நேற்று நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய சுதந்திர தின 75-வது ஆண்டு ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்ட நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.  இந்த ஓட்டத்தில் 100 பேர் கலந்துகொண்டு தேசபந்து மைதானத்தில் தொடங்கி மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.