மாவட்ட செய்திகள்

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில்மயங்கி விழுந்து 2 பேர் சாவு + "||" + 2 people fell unconscious and died

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில்மயங்கி விழுந்து 2 பேர் சாவு

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில்மயங்கி விழுந்து 2 பேர் சாவு
மயங்கி விழுந்து 2 பேர் சாவு
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் அங்கு உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (36). இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அங்கு கறி வெட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.