மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 9:57 PM GMT (Updated: 2021-09-12T03:27:06+05:30)

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் குருநாதன் மனைவி இசக்கியம்மாள் (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கடையில் பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென்று இசக்கியம்மாள் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து புகாரின் ேபரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கல்சுண்டு காலனியைச் சேர்ந்த விஷ்ணு (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
.............

Next Story