நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 12 Sept 2021 3:36 AM IST (Updated: 12 Sept 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

800 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நெல்லை:
ெநல்லை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 800 மையங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
800 மையங்களில்...
கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழக அரசு உத்தரவின்பேரில், நெல்லை மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 800 மையங்களில் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அந்த மையத்தில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
விழிப்புணர்வு
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள முகாம்களில் கிருமிநாசினி தெளித்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் சீரான இடைவெளிகளில் வட்டம் வரைந்தனர்.
மெகா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
............

Next Story