மாவட்ட செய்திகள்

அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று கொேரானா தடுப்பூசி முகாம் + "||" + In all municipalities Corona vaccination camp today

அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று கொேரானா தடுப்பூசி முகாம்

அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று கொேரானா தடுப்பூசி முகாம்
அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று கொேரானா தடுப்பூசி முகாம்
கடையநல்லூர்:
நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. கடந்த பல மாதங்களாக அரசு சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் போட்டுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொரோனாவை ஒழிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு தர வேண்டும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.