10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2021 3:15 PM IST (Updated: 12 Sept 2021 3:15 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி, ஆதம் நகரை சேர்ந்தவர் அமுதா. இவருடைய மகள் மதுமிதா(வயது 15). இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று மதியம் மதுமிதாவிடம், செல்போனில் பேசிய காதலன், அவரை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த மதுமிதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story