மேல்மருவத்தூர் அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா பிடிபட்டது
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா பிடிபட்டது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஜின்னா நகரை சேர்ந்த 18 வயதான ஒருவர் சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு காரை ஓட்டி சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேல்மருவத்தூர் அடுத்த ஊனமலை என்ற இடத்தில் கார் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்னால் கார் மோதியது. இதில் 18 வயதான அவர் படுகாயம் அடைந்தார். அவரை மேல்மருவத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தகவலறிந்த மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி ஆகியோர் காரில் சோதனை செய்தபோது காரில் மூட்டை மூட்டையாக ரூ.78 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story