13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 12 Sept 2021 9:58 PM IST (Updated: 12 Sept 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே சேரம்பாடி அருகே சோலாடியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்துவிட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

அப்போது அங்கு 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு படுத்து கிடப்பது தெரியவந்தது. உடனே அந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சேரம்பாடி அருகே உள்ள கோட்டமலை வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story