கடமலைக்குண்டுவில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கடமலைக்குண்டுவில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி வைஷ்ணவி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்தநிலையில் குழந்தை இல்லை என்ற விரக்தியில் மாணிக்கம் அவரது மனைவி வைஷ்ணவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வைஷ்ணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வைஷ்ணவிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால், அவரது தற்கொலை குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story