சமையல்காரர் கொலை


சமையல்காரர் கொலை
x
தினத்தந்தி 12 Sept 2021 10:48 PM IST (Updated: 12 Sept 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கல்லால் தாக்கி சமையல்காரர் கொலை செய்யப்பட்டார்.

கமுதி, 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன்(வயது 40). சமையல் வேலை செய்து வந்தார். இவர், இதே பகுதியை சேர்ந்த குமரன் (36) என்பவரை சமையல் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அவருக்கு உரிய சம்பளத்தை கொடுத்து விட்டார். இந்த நிலையில் குறைவாக சம்பளம் தந்ததாக கூறி முருகனிடம், குமரன் தகராறில் ஈடுபட்டார். 
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். நேற்று முருகன் ஊராட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வீட்டு வரி ரசீது வாங்கிக்கொண்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டிற்கு அருகே வந்தபோது குமரன், முருகனை வழிமறித்து அவதூறாக பேசி சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த குமரன் அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகனை தாக்கினர்.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் முருகனை் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து முருகனின் மனைவி குருவம்மாள் அபிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கொலை செய்த, குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story