விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Sept 2021 10:51 PM IST (Updated: 12 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.

ஆறுமுகநேரி:
ஆத்தூரை அடுத்துள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் திருமண வீடுகளுக்கும் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி ஆத்தூர் பகுதியில் ஒரு திருமண வீட்டில் சமையல் வேலை பார்த்துவிட்டு ஆத்தூர் வீரபாகு திருமண மண்டபம் அருகே தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோ மீது மோதினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ரமேஷ், ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அவர் குணமடையாத நிலையில் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் காலை ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரமேசுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story