தேன்கனிக்கோட்டை அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது34). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் டிப்பர் லாரி, கார் ஆகியவற்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இதற்காக அவர் பலரிடம் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை. கடன் தொல்லையால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story