தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர் உள்பட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சுற்றுலா வருவது வழக்கம். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்றும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்தனர். அவர்கள் பழமை வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, 300 அடியில் இருந்து விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவில் இயற்கை அழகில் தங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவர்கள் மாசிலா அருவி, காட்சி முனை பகுதிக்கு சென்று இயற்கையையின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் நண்பர்கள், குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை அறப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். எனவே கோவிலுக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story