நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 49,573 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 49,573 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2021 11:35 PM IST (Updated: 12 Sept 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
49 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 49 ஆயிரத்து 521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 524 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 573 ஆக அதிகரித்து உள்ளது.
636 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 37 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 459 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 636 பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story