திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மாணவ மாணவிகள் 2,939 பேர் எழுதினர்.


திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மாணவ மாணவிகள் 2,939 பேர் எழுதினர்.
x
தினத்தந்தி 12 Sept 2021 11:50 PM IST (Updated: 12 Sept 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மாணவ மாணவிகள் 2,939 பேர் எழுதினர்.

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மாணவ-மாணவிகள் 2,939 பேர் எழுதினர். 89 பேர் தேர்வு எழுத வரவில்லை. 
7 மையங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு எழுத 3 ஆயிரத்து 28 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த காலங்களில் பிற மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.
இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மாணவ, மாணவிகள் சிரமமின்றி தேர்வு எழுத சென்றனர். இம்மாவட்டத்தில் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் 480 பேரும், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில் 480 பேர், விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் 420 பேர், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 420 பேர், டீ பப்ளிக் பள்ளியில் 420 பேர், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் 328 பேர், உடுமலை விசாலாட்சி மகளிர் கல்லூரியில் 480 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 28 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
வெப்ப பரிசோதனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு அறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருந்தது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. ஆனால் காலை 10 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் பலரும் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையத்திற்கு வந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பு பரபரப்பாக இருந்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவசரம், அவசரமாக தங்களது வளையல்கள், தங்கச் சங்கிலிகள், கைகெடிகாரங்கள் போன்றவற்றை தங்களது பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர். தேர்வு எழுத சென்ற பலரும் பேனாக்கள் கொண்டு சென்றனர். ஆனால் அவை தேர்வு அறையில் வழங்கப்படும் எனக்கூறி, பேனாக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. 
89 பேர் தேர்வு எழுதவில்லை 
இதுபோல் முகக் கவசமும் வழங்கப்பட்டது. கூலிபாளையம் நால் ரோட்டில் உள்ள வித்யாசாகர் பள்ளியில் பகுதி பகுதியாக மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 
ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோல் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 
திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 28 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 89 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆயிரத்து 939 பேர் தேர்வு எழுதினர்.
மாணவ-மாணவிகள் பேட்டி
நீட் தேர்வு குறித்து பல்லடத்தை சேர்ந்த மிருதுளா என்ற மாணவி கூறியதாவது:- 
பிசிக்ஸ், சம்ஸ், பாடக் கேள்விகள், மிகவும் சிரமமாக இருந்தது. கெமிஸ்ட்ரி, பயாலஜி, கேள்விகள் மிகவும் ஈசியாக இருந்தன. என்றார். 
அவினாசியை சேர்ந்த பிரவீன் குமார்:- பிசிக்ஸ் பாட கேள்விகள் மட்டும், சிரமமாக இருந்தது. பயாலஜி, கெமிஸ்ட்ரி, பாடகேள்விகள் மிகவும் சுலபமாக இருந்தன. என்றார். 
ஊத்துக்குளியை சேர்ந்த ராமானுஜம் கூறியதாவது:- கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், கேள்விகள் மிகவும் சிரமமாக இருந்தது. நீண்ட கேள்விகளாக இருந்தன. அதனால் அந்த இரண்டு பாடத் திட்டங்களிலும் மதிப்பெண் பெறுவது சிரமம், பயாலஜி மிகவும் சுலபமாக இருந்தது. என்றார். 
திருப்பூரை சேர்ந்த ஹரிதா கூறியதாவது:- கெமிஸ்ட்ரி, பயாலஜி, பாட கேள்விகள் மிகவும் சுலபமாக இருந்தன. பிசிக்ஸ் பாட கேள்விகள், நேரடியாக இல்லாமல், சுற்றி வளைத்து கேட்டதால் நீண்ட கேள்விகளாக இருந்தது என்றார்.
கூடுதல் கேள்விகள்
பிரியங்கா, உடுமலை:-
தற்போதுள்ள கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேர்வுக்கான கேள்விகள் எளிதானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.ஆனால் அதற்கு மாறாக கடந்த ஆண்டை விட கடினமானதாக இருந்தது.குறிப்பாக இயற்பியல் பாடம் மிகவும் நீளமான பதில்களை உடையதாக இருந்தது.மேலும் கடந்த ஆண்டு 180 நிமிடங்களில் 180 கேள்விகளுக்கான பதில்கள் என்றிருந்த நிலையில் தற்போது 200 கேள்விகள் கொடுத்து 180-க்கு பதில் அளிக்க வேண்டும் என்று இருந்தது.அதே நேரத்துக்குள் கூடுதலாக 20 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதிருந்தது.இதனால் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாலதன்ஷிகா,திருப்பூர்:- பல கேள்விகள் சுலமாக இருந்தன.ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தன.ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி உள்ளேன். எனவே அதிக மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். என்றார்.

Next Story