கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்
விராலிமலை:
விராலிமலை தாலுகா வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி மகன் சதீஷ் (வயது 15). 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று வேலூர் அருகே மேலதொட்டியப்பட்டியில் உள்ள 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார். இதனை கண்ட வயலில் வேலை பார்த்தவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி நீரில் மூழ்கிய சதீஷ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விராலிமலை அருகே வேலூரில் கிணற்றில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story