திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
83 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 371-ஆக உள்ளது.
பலி இல்லை
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 83 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 492-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 942 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு மாவட்டத்தில் பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 937-ஆக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை என்பதால், அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story