பஞ்சு குடோனில் தீ


பஞ்சு குடோனில் தீ
x
தினத்தந்தி 13 Sept 2021 12:29 AM IST (Updated: 13 Sept 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அருகே பஞ்சு குடோனில் தீப்பிடித்தது.

க.பரமத்தி,
க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம்- காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). இவர் க.பரமத்தி அருகே உள்ள மோளபாளையத்தில் பழைய பஞ்சு அரைக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story