மாவட்ட செய்திகள்

விபத்தில் மூதாட்டி பலி + "||" + death

விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் மூதாட்டி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசி பழனி ஆண்டவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). இவருடைய தாய் சரோஜா தேவி (82). சிவகுமாரின் மகன் ஹரிஷ் (30). ஹரிஷின் மனைவி ஆர்த்தி (28). இவர்கள் சேத்தூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலான அய்யனார் கோவிலுக்கு காரில் சென்றனர். காரை சிவகுமார் ஓட்டி வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் சரோஜாதேவி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சரோஜா தேவியை சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து முதியவர் சாவு
காரியாபட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.
2. அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து; ஒருவர் சாவு
சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி சாவு
தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. வெவ்வேறு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் வெவ்வேறு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மயங்கி விழுந்து சிறை காவலர் சாவு
மதுரை மத்திய சிறையில் மயங்கி விழுந்து சிறை காவலர் இறந்தார்.