மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் 1,067 மையங்களில் தடுப்பூசி + "||" + Collector inspection

மாவட்டத்தில் 1,067 மையங்களில் தடுப்பூசி

மாவட்டத்தில் 1,067 மையங்களில் தடுப்பூசி
மாவட்டத்தில் 1,067 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சிறப்பு அதிகாரியுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர், 
மாவட்டத்தில் 1,067 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சிறப்பு அதிகாரியுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். 
தடுப்பூசி முகாம் 
 விருதுநகர் மாவட்டத்தில் 1,067 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 7 மணி அளவில் விருதுநகர் தேசபந்து திடவில் தடுப்பூசி முகாமை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். முகாமில்  விருதுநகர்எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மற்றும் கலெக்டர் மேகநாதரெட்டி அல்லம்பட்டி சவுடாம்பிகை மேல்நிலைப்பள்ளி, ராவ்பகதூர் நடுநிலைப்பள்ளி மற்றும் சூலகரை ஸ்டாண்டர்ட் பள்ளி ஆகிய மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்தனர். 
செட்டியார்பட்டி 
செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு, செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். 
இதேபோல் தளவாய்புரம் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி, ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உமாதேவி வன ராஜன், முகவூர் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, முத்துசாமிபுரம் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் செல்வி கணேஷ், அயன் கொல்லங் கொண்டான் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் வெள்ளத்துரை, சுந்தரராஜபுரம் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் சரோஜா பாலகிருஷ்ணன், சோலைசேரி பகுதியில் பஞ்சாயத்து தலைவர் வைரமுத்து ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பையூரில் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட உள்ள பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.
2. வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு
வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
3. தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க நிரந்தர தீர்வு காண்பது குறித்து கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார்.
4. கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடி பகுதியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
5. பள்ளி, கல்லூரி வாகனங்களில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு
நெல்லையில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.