கார் மீது வேன் மோதல்; 3 பேர் படுகாயம்
கார் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள அழகாபுத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது52). இவர் தனது உறவினர்கள் ராமசாமி, அழகம்மாள், மணிமாறன் ஆகியோருடன் பாவாலி கிராமத்தில் சாமி கும்பிட்டுவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது விருதுநகர்-சிவகாசி ரோட்டில் காரை சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் கார் மீது மோதியதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த ராமசாமி, அழகம்மாள், மணிமாறன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வேனை ஓட்டி வந்த உப்புபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story